Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 26

ஒப்புமை உயர்வு நவிற்சி

46
கார் மேகமும் பொழிலும் ஒப்பாய் நின்றன. உழவர் கழனியில் இட்ட போரும் இமய மலையும் ஒப்பாகத் தோன்றின. வயலிலுள்ள நீரும் கடலும் ஒப்பாகத் திகழ்ந்தன. இங்குள்ளவரின் செல்வ வளம் மிக்க ஊரும் வானுலகமும் ஒப்பாகத் தோன்றின.
47
நெல் மலை போல் இல்லாவை அந்த நாட்டில் இருக்கிறது என்றால் அது கடலோரத்தில் குவித்து வைத்திருக்கும் முத்துக் குவியல் தான். வாயில் வரும் சொல் மலை போல் உள்ளது பாற்கடலில் தோன்றிய அமிழ்தந்தான். உண்மையான மலை அல்லாதவை அந்த நாட்டு ஆறுகள் கொண்டுவந்த நிதிக் குவியல்தான். இமயமலை அல்லாத மலை என்று ஒன்று உண்டு என்றால் அது மணிகள் குவிந்து கிடக்கும் மணல் குவியல் தான்.
48
இளைஞர் பந்தாடும் இடம் மயிலில் ஊர்ந்து செல்லும் முருகனைப் போன்றவர் கலைகளைப் பயிலும் இடமாகும். அங்கு உள்ளவை சந்தன வனம் அன்று; சண்பகப் பூ பூத்துக்கிடக்கும் வனம். அங்கு இருப்பவை நந்தவனம் அல்ல, மணம் கமழும் முல்லை நிலம்.
49
கிளிகள் எதனைப் பயின்றன,  இளையவர்கள் கொஞ்சும் மொழியைப் பயின்றன. அவர்கள் நடந்து செல்வது போலவே அன்னம் நடந்து சென்றது. வளை என்னும் பூக்கள் எதைச் சிந்தின, அவர்களின் சிரிப்பு முத்துக்களை உமிழ்ந்தன.
50
பழையர் வீடுகள் பழச்சாற்றுக் கள்ளை நுகரும். உழவர் வீடுகள் உழவுத் தொழிலை விரும்பும். மழவர் (போராளிகள்) வீட்டில் மண முரசம் ஒலிக்கும். கிழவர் (உரிமையாளர்) மனைகளில் சங்கும், யாழும் ‘கிளை’-பண் பாடும்.

காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம்.           46

நெல் மலை அல்லன-நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன-தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன-நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன-மணி படு புளினம்.    47

பந்தினை இளையவர் பயில் இடம்,-மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்,-
சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
நந்தன வனம் அல, நறை விரி புறவம்;              48

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.            49

பழையர்தம் மனையன, பழ நறை; நுகரும்
உழவர்தம் மனையன, உழு தொழில்; புரியும்
மழவர்தம் மனையன, மணஒலி; இசையின்
கிழவர்தம் மனையன, கிளை பயில் வளை யாழ்.   50

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...