மகளிர் சிலம்பொலி
36
மகளிர் நடக்கும் சிலம்பொலி கேட்கும். தொங்கும் முத்து பவள மாலைகளால் மாளிகைகள் கற்பக மரம் போலக் காணப்படும்.
37
மலையில் வளரும் வாழைமரம் போல மாளிகைகளில் கொடிகள் பறக்கும். வானத்தில் நிலா தேய்வது, இங்குப் பறக்கும் கொடிகள் உரசுவதால்தான்.
38
பொன்மண்டபம், பூமாலை தொங்கும் மன்றங்கள், முற்றம் தெரியாதபடி போட்ட முத்துப்பந்தல் – ஆகியவை இருக்கும்.
39
மின்னல் போலவும், வெயில் போலவும் மாளிகைகளில் விளக்கு வெளிச்சம் காணப்படும்.
40
அயோத்தி நகராம் பெண்ணின் நிழல் என்னுபடிக்கு ஞாயிறும் திங்களும் வெளிச்சம் தரும்.
துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
கொடியிடைத் தரள வெண் கோவை சூழ்வன;-
கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே. 36
காண் வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்,
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன;
வாள் நனி மழுங்கிட மடங்கி, வைகலும்
சேண் மதி தேய்வது, அக் கொடிகள் தேய்க்கவே. 37
பொன் திணி மண்டபம் அல்ல, பூத் தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே. 38
மின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,
துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,
பொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே! 39
எழும் இடத்து அகன்று, இடை ஒன்றி, எல் படு
பொழுதிடைப் போதலின், புரிசைப் பொன் நகர்,
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை
நிழல் எனப் பொலியுமால்-நேமி வான் சுடர். 40
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:
Post a Comment