அயோத்தி மகளிர் அழகு
46
சோலைகள் தேனைப் பொழியும். அந்தச் சோலைகளைத் தென்றல் விரும்பும். அதில் வண்டுகள் நுழையும். தழுவும் ஆண்களைப் பிரிந்த மகளிரின் கொங்கைகள் கொதிக்கும்.
47
மகரயாழ் இன்னிசை பாடும். மகளிர் பாடலால் அந்த இசை நிமிரும். வள் என்னும் இசைக்கருவி சுழலும். கிளி மகளிரோடு கண்ணை விழித்துக்கொண்டே உறங்கும்.
48
காதலியின் கால் உதைப்பதால் காதலன் தோள் சிவக்கும்.
49
எரியும் விளக்கு வெளிச்சத்தால் பகலா இரவா என்று பொழுது தெரியாது. மகளிரின் அழகைப் பார்த்துக்கொண்டே இருப்பதற்காக அங்குள்ள ஓவியங்கள் கண்ணை இமைப்பதில்லை.
50
மாளிகைகளில் திருமகள் தங்குவாள். அங்கு விளக்கு வெளிச்சமும் மகளிர் மேனி வெளிச்சமும் இருக்கும்.
பொழிவன சோலைகள் புதிய தேன் சில;
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன; அன்னவை நுழைய, நோவொடு
குழைவன, பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே. 46
இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை
நிறங் கிளர் பாடலான் நிமிர்வ; அவ்வழி
கறங்குவ வள் விசிக் கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ, மகளிரோடு ஓதும் கிள்ளையே. 47
குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுகத் தொழில்கொடு, பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்,
உதைபடச் சிவப்பன, உரவுத் தோள்களே. 48
பொழுது உணர்வு அரிய அப் பொரு இல் மா நகர்த்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு எனப்
பழுது அறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்,
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே? 49
தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே. 50
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:
Post a Comment