Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நகரப் படலம் Kamba Ramayanam 39

மகளிர் திளைப்பு

51
தண்ணுமை ஒலிக்கேற்ப மதங்கியர் காலில் சதி போட்டு ஆடுவர். அந்த ஆட்டத்தின்போது சலங்கை ஒலி கேட்கும். அந்த ஒலியுடன் குதிரைக் காலடி ஒலியும் ஒத்து ஒலிக்கும். தண்ணுமை, சதி, குதிரைத் தப்படி மூன்றும் கேட்கும்.
53
மகளிர் புன்னகை ஆடவருக்குத் துன்பம் விளைவிக்கும். மகளிரின் இளைக்கும் இடையைக் கண்டு முலை திளைக்கும்.
54
ஆண் பெண் ஆளிகள் குகையில் முழங்கும். அதனைக் கேட்டு ஆண்யானைகள் மும்மதம் சொரியும். அந்த மதம் தரையில் விழுந்து குழி ஆகும். அந்தக் குழியில் அங்குச் செல்லும் தேர்கள் விழும்.
55
ஊடும் மகளிர் பறித்தெறிந்த மாலைகளும், அவர்களின் முலையில் இருந்த சந்தனமும் ஆண்களை வழுக்கிவிழச் செய்யும்.

பதங்களில், தண்ணுமை, பாணி, பண் உற
விதங்களின், விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள்; அல்லன புரவித் தாள்களே.       51

முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந் துயர்
விளைப்பன; அன்றியும், மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண் இடை; இளைப்ப, மென் முலை
திளைப்பன, முத்தொடு செம் பொன் ஆரமே.               53

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை, கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும், மண்ணும் கீழ் உறக்
குழை விழும்; அதில் விழும், கொடித் திண் தேர்களே.       54

ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன,
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவது, ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே.   55

பாடல் தொடர் எண்ணில் பிழை நேர்ந்துள்ளது.
கிடைத்த பாடல்கள் இதனையே காட்டுகின்றன.
பொறுத்தருள வேண்டும்.

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...