எங்கும் மணம், ஒலி
56
சவாரி செய்யும் இவுளி என்னும் குதிரைகளும், வண்டி இழுக்கும் குரம் என்னும் குதிரைகளும் இளைப்பு வாங்கும். அவை நிலத்தைப் பறித்துக்கொண்டு ஓடும். அப்போது புழுதி எழும். மணியொலி கேட்கும். குமரர் மாலைகளின் தேன் அந்தப் புழுதியில் கொட்டும்.
57
யானை மதம் வேங்கை மரத்தடியில் நாறும் (மணக்கும்). மகளிர் வாய் குமுதம் நாறும் (தோன்றும்). கலப்பை மணம் விளையும் கதிர்களில் நாறும். மகளிர் கூந்தலில் மலர் நாறும்.
58
தேவர் உலகை இதனோடு ஒப்பிட்டால் அளகை நகரம் அயோத்தியிடம் தோற்றுப்போகும்.
59
எங்கும் தேன் உண்ணும் வண்டுகள். மைந்தர்களின் கூட்டம்.
60
வளை, வயிர், வீணை, முழவு, கின்னரம், குழல், - முதலான பல்லியம் மற்றும் கடல் ஒலி அயோத்தியில் கேட்கும்.
இளைப்ப அருங் குரங்களால், இவுளி, பாரினைக்
கிளைப்பன; அவ் வழி, கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி; அவை ஒளிர, மீது தேன்
துளிப்பன, குமரர்தம் தோளின் மாலையே. 56
விலக்க அருங் கரி மதம் வேங்கை நாறுவ;
குலக் கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ;
கலக் கடை கணிப்ப அருங் கதிர்கள் நாறுவ;
மலர்க் கடி நாறுவ, மகளிர் கூந்தலே. 57
கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
யாவையும் வழங்கு இடத்து இகலி, இந் நகர்
ஆவணம் கண்டபின், அளகை தோற்றதே! 58
அதிர் கழல் ஒலிப்பன; அயில் இமைப்பன;
கதிர் மணி அணி வெயில் கால்வ; மான்மதம்
முதிர்வு உறக் கமழ்வன; முத்தம் மின்னுவ;
மதுகரம் இசைப்பன;-மைந்தர் ஈட்டமே. 59
வளை ஒலி, வயிர் ஒலி, மகர வீணையின்
கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,
துளை ஒலி, பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி, -கடல் ஒலி மெலிய, விம்முமே. 60
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:
Post a Comment