Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நகரப் படலம் Kamba Ramayanam 41

மகளிர் பொழுதுபோக்கு

61
அயோத்தியில் மண்டபங்கள் பல இருந்தன.
62
அங்கு மணி சூரியன் போல் ஒளிரும். யானை மதம் அருவியைக் காட்டிலும் பெரிதாக ஒழுகும். குதிரைப்படை கடலைவிடப் பெரியது.
63
தோரண வாயில்களில் மகளிர் முகமலர்கள் பூக்கும். அவை ஆண்களின் மார்பில் அழுந்தும்.
64
மன்னர் காலில் கழல் முழங்கும் ஓசையிடன், தேர் ஒலி, குதிரை தாவம் ஒலி ஆகியனவும் கேட்கும். மகளிர் சிலம்பொலிக்கு ஏற்ப நீர்த்துறைகளில் அன்னம் நடக்கம்.
65
ஊடல், கூடல், பாடல், கேட்டல், ஆடல், சூடல் ஆகியவற்றில் மகளிர் பொழுதைப் போக்குவர்.

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்,
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்,
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்,
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.      61

இரவியின் சுடர் மணி இமைக்கும், தோரணத்
தெரிவினின் சிறியன, திசைகள்; சேண் விளங்கு
அருவியின் பெரியன, ஆனைத் தானங்கள்;
பரவையின் பெரியன, புரவிப் பந்தியே.              62

சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன, மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ; மற்று அவை,
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே.         63

மன்னவர் கழலொடு மாறு கொள்வன,
பொன் அணித் தேர் ஒலி, புரவித் தார் ஒலி;
இன் நகையவர் சிலம்பு ஏங்க, ஏங்குவ,
கன்னியர் குடை துறைக் கமல அன்னமே.    64

ஊடவும், கூடவும், உயிரின் இன் இசை
பாடவும், விறலியர் பாடல் கேட்கவும்,
ஆடவும், அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும், பொழுது போம்-சிலர்க்கு, அத் தொல் நகர்.               65

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...