ஆடவர் மகளிர் கூடிப் பொழுதுபோக்கல்
66
யானை, தேர் ஆகியவற்றில் ஏறி உலாவல், இரவலர்களுக்கு வழங்கல் ஆகியவற்றில் சிலர் பொழுதைப் போக்குவர்.
67
போர் யானையில் ஏறல், வில் எய்தல், குதிரையில் ஏறிப் பூப்பந்து விளையாடல் – ஆகியவற்றில் சிலர் பொழுதைப் போக்குவர்.
68
நந்தவனத்தில் பூ பறித்தல், மான்போல் ஆண்களோடு சேர்ந்து அருவி ஆடல், ஆண்களின் இதழைச் சுவைத்தல், அவர்களோடு சூதாடல் – ஆகியவற்றில் மகளிர் பொழுது போக்குவர்.
69
மாடத்தில் பறக்கும் கொடிகள் வானத்தில் பாயும் கங்கையாறு வற்றுமாறு நக்கும்.
70
தோரணங்களும் மதிலும் போட்டி போட்டுக்கொண்டு வானளாவப் பறக்கும்.
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்,
எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும்,
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும், பொழுது போம்-சிலர்க்கு, அம் மா நகர். 66
கரியொடு கரி எதிர் பொருத்தி, கைப் படை
வரி சிலை முதலிய வழங்கி, வால் உளைப்
புரவியில் பொரு இல் செண்டு ஆடி, போர்க் கலை
தெரிதலின், பொழுது போம்-சிலர்க்கு, அச் சேண் நகர். 67
நந்தன வனத்து அலர் கொய்து, நவ்விபோல்
வந்து, இளையவரொடு வாவி ஆடி, வாய்ச்
செந் துவர் அழிதரத் தேறல் மாந்தி, சூது
உந்தலின் பொழுது போம்-சிலர்க்கு, அவ் ஒள் நகர். 68
நானா விதமா நளி மாதிர வீதி ஓடி,
மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணு மாபோல்,
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப் போய்,
வான் ஆறு நண்ணி, புனல் வற்றிட நக்கும் மன்னோ. 69
வன் தோரணங்கள் புணர் வாயிலும், வானின் உம்பர்
சென்று ஓங்கி, 'மேல் ஓர் இடம் இல்' எனச் செம் பொன் இஞ்சி-
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன-
ஒன்றோடு இரண்டும், உயர்ந்து ஓங்கின, ஓங்கல் நாண. 70
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:
Post a Comment