Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நகரப் படலம் Kamba Ramayanam 44

மிகைப் பாடல்கள்

6-1
அரசு, அணி, மணி, - முதலான செல்வங்களும், யானை, குதிரை, தேர் முதலான படைகளும், மற்றும் உலகில் உள்ளவை அனைத்தும் அயோத்தியில் இருந்தன. அதனால் முனிவர் விண்ணவர் இயக்கர், விஞ்சையர் முதலானோரும் அங்கு வாழ்பவர் ஆயினார்.
74-1
எங்கும் ஒளி வீசி, பிறவித் துன்பம் போக்கும் அன்பும் அறமும் உருவமாகக் கொண்டு கருணைத் தேவர் உருவாக விளங்கும் விளங்கும் ஊர் அயோத்தி.
74-2
வேதத்தின் விளைபொருளாய், வேறுபட்ட ஒளியாய், உலக உயிர்கள் அனைத்தையும் தன் வயிற்றுக்குள் அடக்கிக்கொண்டுள்ள ஆதி முதல்வன் அமர்ந்திருந்த இடம் அயோத்தி.

அரைசு எலாம் அவண; அணி எலாம்அவண; அரும் பெறல்மணி எலாம்அவண;
புரைசை மால் களிறும், புரவியும், தேரும், பூதலத்து யாவையும், அவண;
விரைசுவார், முனிவர்; விண்ணவர், இயக்கர், விஞ்சையர், முதலினோர் எவரும்
உரை செய்வார் ஆனார்; ஆனபோது, அதனுக்கு உவமை தான் அரிதுஅரோ, உளதோ?         6-1

எங்கும் பொலியும் பரஞ் சுடர் ஆகி, எவ் உயிரும்
மங்கும் பிறவித் துயர் அற, மாற்று நேசம்
தங்கும் தருமத்து உரு ஆகி, தரணி மீது
பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து யாம் எவன் புகல்வோம்?              74-1

வேதம் அதனுள் விளைபொருள் விகற்பத்துள் அடங்காச்
சோதி மயமாய்த் துலங்கி, தொல் உயிர்த் தொகை பலவாய்,
ஓது புவனம் உதரத்துள் ஒடுக்கியே, பூக்கும்
ஆதி முதல்வன் அமர் இடம் அயோத்தி மா நகரம்.                74-2 

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...