தயரதன் மாண்பு
1
முன்பு சிறப்பித்துக் கூறப்பட்ட அயோத்தி நகருக்கு அரசன், அரசர்களுக்கெல்லாம் அரசன். இந்தக் கதைக்கு இறைவன் ஆகிய இராமனைத் தந்த அற மூர்த்தி.
2
ஆதி அறிவு, அருள், அறம், அடக்கம், வீரம், ஈகை, நீதி - இப்படி எண்ணில்லா நற்குணங்களுடன் நாடாண்டுவந்தான்.
3
இவனது கைகள் தாரை வாரத்துத் தரும் ஈரம் புலராமல் இருக்கும். அந்தணர் யாகம் செய்ய இவன் வழங்காத நாளும் இல்லை.
4
தாயின் அன்பு, தவத்தின் பயன், தந்தையை நல்ல கதிக்குக் கொண்டு செல்லும் மகன், நோய்க்கு மருந்து, கேள்வியால் பெற்ற அறிவு ஆகியவற்றைப் போன்றவன் இவன்.
5
கடல், அளக்கர், வேலை, பௌவம் என்பன கடலை உணர்த்தும் சொற்கள். இரப்போர் கடலை ஈந்தே கடந்தான். அறிவுக் கடலை ஆய்ந்தே கடந்தான். பகைவர் கடலைச் சினந்தே கடந்தான். செல்வக் கடலைத் தோய்ந்தே கடந்தான்.
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான். 1
ஆதி மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,
நீதி நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ. 2
மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்
செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ. 3
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான். 4
ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். 5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -4. அரசியற் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:
Post a Comment