வீரமும் ஈரமும்
வெள்ளம், பறவை, விலங்கு, வேசையர் மனம் இவை ஓடுமாறு வாழ்ந்தவன் தயரதன் என்னும் பெயர் கொண்ட இந்த வள்ளல். 6
இமயம் மதிலாகவும், கடல் கிடங்காகவும், சிறு மலைகள் மாலையாகவும் கொண்டது மன்னுலகில் அயோத்தி. அதன் அரசனாகத் தயரதன் விளங்கினான். 7
வலியவர்களை வென்று கூர் தீட்டுவதால் இவனது வேல் தேயும். அரசர்கள் இவனை வணங்குவதால் அவர்களின் முடி பட்டு இவன் காலிலுள்ள கழல் தேயும். 8
இவனது வெண்கொற்றக் குடை உலகிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் நிழல் தந்து வளரும். மக்களின் மன இருளைப் போக்கும். எனவே வானத்தில் நிலா இருப்பது மிகை என்று கூறும்படி நாடாண்டுவந்தான். 9
வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே. 6
நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்
பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி
வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே. 7
பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால். 8
மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,
தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,
விண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே. 9
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -4. அரசியற் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:
Post a Comment