வசிட்டன் எண்ணிப்பார்க்கிறான்
வசிட்ட முனிவன் எண்ணிப் பார்க்கிறான். கடலுக்கு நடுவில் அனந்தன் என்னும் பாம்பின்மேல் மலை படுத்துறங்குவது போலப் பள்ளிகொண்டிருக்கும் கருமேகமான திருமால் ‘கொலை புரிவது ஒன்றை மட்டுமே தொழிலாகக் கொண்ட அரக்கர்களின் கொடுமைகளைத் தீர்ப்பேன்’ என்று தேவர்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பார்க்கிறான். 6
தன் பாக சாதுவாக விளங்கும் அனந்தனை மேகநாதன் தன் பாசக் கயிற்றால் கட்டி இலங்கைக்குக் கொண்டு சென்றான். அதனைத் திருமால் மீட்டதை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமன் தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்ததை எண்ணிப் பார்க்கிறான். 7
20 கைகளும், 10 தலைகளும் கொண்ட இலங்கை அரசனை அழித்தல் கருமேகமான திருமாலுக்கு ஒரு செயல் அன்று, அவன் அரக்கனோடு போரிட்டு தேவர்களின் துன்பத்தைத் தணித்தால்தான் வழி உண்டாகும் - என்று முனிவன் எண்ணினான். 8
கடலலையில் துயிலும் பயோததி திருமால் ஒரு மரகத மலை. பரகதியை உணர்ந்தவர்களுக்கு அவன் உதவி பண்ணும் பான்மை கொண்டவன். அவனைக் கை கூப்பி வணங்கி வாழ்த்திக்கொண்டிருந்த வேளையில் தயரதன் தன் குறையை முனிவனிடம் கூறினான். 9
கருமேகம் தாமரைக் காட்டில் பூத்திருப்பது போல, திருமகளோடு திருமால் இருக்கும்போது பொன்குன்றத்தில் வருவது போலத் கருடன் தோன்றினான். 10
அலை கடல் நடுவண், ஓர் அனந்தன் மீமிசை,
மலை என விழி துயில்வளரும் மா முகில்,
'கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்' என்று,
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையே. 6
பாக சாதனந்தனைப் பாசத்து ஆர்த்து, அடல்
மேகநாதன், புகுந்து இலங்கை மேய நாள்,-
போக மா மலர் உறை புனிதன்,- மீட்டமை,
தோகை பாகற்கு உறச் சொல்லினான் அரோ. 7
இருபது கரம், தலை ஈர்-ஐந்து, என்னும் அத்
திருஇலி வலிக்கு, ஒரு செயல் இன்று, எங்களால்;
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது, இடர் தணிக்கின் உண்டு' எனும் புணர்ப்பினால். 8
திரை கெழு பயோததித் துயிலும், தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்,
கர கமலம் குவித்து இருந்த காலையில்,-
பரகதி உணர்ந்தவர்க்கு உதவி பண்ணவன், 9
கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான். 10
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:
Post a Comment