மிகைப் பாடல்கள் – பகுதி 5 (பிருகு, கியாதி, குமுதி)
பிருகு முனிவன் மனைவி கியாதி. இவள் அரக்கன் (தக்கன்) மகள். இவள் ஆவியைத் திருமால் கவர்ந்தார். 39-2
வானகம், மண்ணகம் ஆகியவற்றில் உள்ள உயிர் தனக்குக் குடிநீர் எனக் கருதிய குமுதி என்பவளை இந்திரன் கொன்றான். 39-3
இதனால் திருமாலுக்கோ, இந்திரனுக்கோ துன்பம் ஏதும் நேர்ந்ததா? எனவே தாடகையைக் கொல்லத் தயங்காதே என்று விசுவாமித்திரர் இராமனிடம் கூறினார். 39-4
மாயை வளர்த்த பெண் (சூர்ப்பனகை) மூக்கையும் காதையும் அறுத்த இலக்குவனும் தாடகையைத் தாக்கினான். 48-1
தாடகை எறிந்த சூலத்தை விலக்கி, இராமன் ஊழித்தீ ஒப்பதோர் கணையைத் தொடுத்தான். 48-2
'பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை
வரு கயல் கண் கியாதி, வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற, உறவாதலே
கருதி, ஆவி கவர்ந்தனன், நேமியான். 39-2
'"வானகத்தினில், மண்ணினில், மன்னுயிர்
போனகம் தனக்கு" என்று எணும் புந்திய
தானவன் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன், 39-3
'ஆதலால், அரிக்கு, ஆகண்டலன் தனக்கு,
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால், இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!' 39-4
ஏக்கமோடும் இமையவர் எங்கணும்,
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்,
மூக்கும் வார் செவியும் முறை போயிட,
தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான். 48-1
விலக்கி நின்று, அவன் வெங் கணை விரைவினில் விலக்கி,
கலக்கம் வானவர் தவிர்ந்திட, காலனும் கலங்கத்
துலக்கி, வையகத்து இடுக்கணும் முனிவர்தம் துயரும்
உலக்க, ஊழித் தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான். 48-2
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:
Post a Comment